Monday, November 15, 2010

மதியினால் மதிகெட்டு...

ஆதியிலும் இப்படி இல்லை
ஆடையிலும் இப்படி இல்லை
மதியினால் மதிகெட்டு
பாதியில் தான் பைத்தியமானேன்....

- பாலா

Sunday, November 14, 2010

நிலவொளி...என் முகவரி

பொழிந்திடும் ஏகாந்த நிலாவொளி
வழிந்திடும் கண்ணோரம் நீர்த்துளி
இனி வேண்டாம் எனக்கிந்த முகவரி
விடியும் இடம் தேடி நடக்கின்றேன்...

இரவு ... நீ விட்டுச் சென்ற நிழல் அது
நிலவு ... நீ தந்து சென்ற நினைவது
உன்னைக் காணாமல் காதல் கண்ணோரம் தேடி வருகுது
வேறு இடம் தேடி எங்கு நான் நடப்பது...

- பாலா